Home செய்திகள் பா.ஜ.க தலைவர் தமிழிசை கீழக்கரை வருகை – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டு..

பா.ஜ.க தலைவர் தமிழிசை கீழக்கரை வருகை – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டு..

by ஆசிரியர்

தமிழகத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்ததன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாக்கரைவாடி முத்துமாரியம்மன் கோயில் ஆடி திருவிழா வில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,      தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் நலன் பாதுகாக்க பா.ஜ.க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதுடன் தேவையான உதவிகளை யும் செய்து வருகிறது. தமிழ் நாட்டில் அரசு மாறுபட்ட சூழலில் உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களில் மட்டும் தான் தமிழ்க அரசு இணக்கமான போக்கை கடைபிடிக்கப்படுகிறது. மற்றபடி ஊழல் குறையவில்லை. திராவிட கட்சியில் தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பின் இந்த ஒரு வார காலத்தில் குழப்பங்கள் அதிகரித்துள்ளது. அழகிரி ஸ்டாலின் சண்டை பழைய கதை. இது திமுக விற்கு சவாலாக அமைந்துள்ளது.

காரைக்குடி- தூத்துக்குடி ரயில் திட்டம் மற்றும் கீழக்கரை குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்தில் எது  நடந்தாலும் அது பாஜக தான் என்று சொல்லும் வழக்கம் உள்ளது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் தினந்தோறும் பெண்களிடம் நகை பறிப்பு வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், குப்புராமு, நாகராஜன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் பிரபாகரன் , அலவாக்கரைவாடி நாடார் உறவின் முறை தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!