Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு சென்று உணவு வழங்கிய கீழக்கரை முன்னாள் சேர்மன் குடும்பத்தினர்…

மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு சென்று உணவு வழங்கிய கீழக்கரை முன்னாள் சேர்மன் குடும்பத்தினர்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகாவிற்கு உள்பட ஓரிக்கோட்டை என்ற கிராமத்தில் கருணை இல்லம் என்ற மாற்றுத்திரனாளிகளான ஆண்கள், பெண்களை அன்போடு பராமரிக்கும் இல்லம் செயல்படுகிறது. இந்த இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளான சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பலர் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருவதோடு வருங்காலத்தில் அவர்களின் வாழ்வாதரத்தில் வாழும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கருணை இல்லத்திற்கு மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் வழிகாட்டுதலோடு கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியில் B.A இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் இந்த இல்லத்திற்கு நேரில் சென்று ஒரு நாள் உணவு வழங்கி தனது பிரிவு உபசார நிகழ்வை முற்றிலும் வித்தியாசமாக நடத்தி பலரின் பாராட்டுதலை பெற்றார். இந்த மனித நேய செய்தி கீழக்கரை டைம்ஸ் மற்றும் கீழை நியூஸ் இணைய தள பக்கங்களில் வெளி வந்து இதன் மூலம் கீழக்கரை மக்களுக்கு அரசு அங்கீகாரத்தோடு இப்படி ஒரு கருணை இல்லம் இருப்பது அறிய வந்தது. கீழக்கரையை சேர்ந்த கருணை உள்ளம் படைத்தவர்கள் இந்த இல்லத்திற்கு இந்த செய்தி மூலம் உதவி செய்து வருகின்றார்கள்.

இன்று இந்த கருணை இல்லத்திற்கு கீழக்கரை முன்னாள் நகர் மன்ற தலைவி ராவியத்துல் கதரிய்யா குடும்பத்தினர் நேரில் சென்று உணவு வழங்கினார்கள். முன்னாள் சேர்மனுடன் அவரின் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோர் உடன் சென்றனர். இவர்களுடன் மக்கள் நல கழகம் முகைதீன் இப்ராஹிம் உடனிருந்தார்.

இந்த மனித நேய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட முன்னாள் நகர் தலைவியின் சகோதரர் அஜ்மல் கான் கூறுகையில், எங்கள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட இல்லங்களை தேடி சென்று உணவு பொருள் வழங்கி வருகின்றோம். ஆனால் இன்று இந்த இல்லத்திற்கு நேரில் சென்று உணவு வழங்கிய போது எங்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. இங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் வேறு வேறு பாதிப்புகளுக்கு உள்பட்டு இருப்பது உண்மையில் எங்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கருணை இல்லதிற்கு நேரில் சென்று உணவு வழங்கிய இந்த நாளை எங்களால் மறக்க முடியாது. இப்படிப்பட்ட அரசு அங்கீகாரத்தோடு செயல் படும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களை கண்டறிந்து கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவ முன் வரவேண்டும்.நாளை சுதந்திர தின விழாவில் இந்த குழந்தைகளுக்கு உணவு வழங்க கருணை இல்லம் நிர்வாகிகளிடம் கேட்டோம். நாளை வேறு ஒருவர் உணவு வழங்க இருப்பதாக கூறியதால் வரும் சனிக்கிழமை மீண்டும் இங்கு உணவு வழங்க இருக்கின்றோம் என்றார்.

இது சம்பந்தமாக முன்னாள் நகர் மன்ற தலைவி ராவியத்துல் கதரிய்யா கூறுகையில் இந்த கருணை இல்லத்தை மிகவும் சுகாதாரமாக வைத்து இருக்கின்றார்கள். இந்த கருணை இல்லத்தில் இருக்கும் சமூக சேவகிகள் அனைவரும் குழந்தைகளுடன் அன்புடன் நடந்து கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இவர்களுக்கு இறைவன் பொறுமையை வழங்க வேண்டும் என்றார்.

இந்த கருணை இல்லம் பற்றி மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் கூறுகையில் இந்த இல்லம் அரசு அங்கீகாரத்தோடு முற்றிலும் சுகாதாரமாக நடத்தப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு இல்லம் நடத்துவதாக பலர் கூறிக்கொண்டு அரசு அங்கீகாரம் பெறாமல் தன் சுய நலத்திற்காக நடத்தி வருவதோடு இவர்களிடம் இருக்கும் மாற்றுத்திரனாளிகளை வேலைகள் செய்ய வற்புறுத்தி கொடுமை செய்வதாக அவ்வப்போது தினசரி நாளிதழ்களில் காண்கின்றோம். இப்படிபட்ட போலி மாற்றுத்திறனாளிகள் விடுதிக்கு மத்தியில் அரசு அனுமதியுடன் மனித நேயத்தோடு நடத்தப்படும் இப்படிப்பட்ட விடுதிகளுக்கு நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ முன் வர வேண்டும். இந்த இல்லத்தில் பராமரிக்கப்படுபவர்களுக்கு நன்மையை நாடி உணவு வழங்கும் கருணை உள்ளம் படைத்தவர்கள் என்னையோ,எங்கள் கழகத்தின் நிர்வாகிகளையோ அல்லது கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்பு கொண்டால் இதற்கான வழிகாட்டுதல் மற்றும் குறிப்பிட்ட நாளில் உணவு வழங்க எந்த வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மனித நேயத்தோடு செய்வோம் என்றார்.

இந்த கருணை இல்லத்திற்கு உதவி மற்றும் உணவு வழங்க கீழ்கண்ட அலைபேசியை தொடர்பு கொள்ளலாம்:-

9092090305 9443358305 9677640305 9884640305 9791742074 9597048766 9944172759

அமீராக நிர்வாகிகள் தொடர்புக்கு:- 558547494 559168771

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!