கையில் வெண்ணெய் இருக்க.. நெய் வாங்க அலையும் கீழக்கரை நிர்வாகம்..

கையில் வெண்ணெய் இருக்க நெய்கு அலைவதாக பழமொழி சொல்வதுண்டு, ஆனால்  அதைத் தான் ஹைமாஸ் விளக்கு விசயத்தில் செய்து வருகிறது.  பயனில்லாமல் குப்பையோடு கடற்கரை ஒரத்தில் கிடக்கும் விளக்கு, அதுபோல் அமைக்கப்பட்ட விளக்குகளும் ஏரியாமல் இருக்கும் அவலம்.

இந்நிலையில்  கீழக்கரை நகராட்சி சார்பாக மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம், செக்கடி முன்பாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கு  ₹ 4.90 லட்சம் செலவில் இன்று (13/08/2018) விளக்கு அமைக்கும் பணிகள் துவங்கியது.

இதுகுறித்து மின்ஹாஜி பள்ளி பொருளாளர் ரமீஸ்கான் அவர்கள் கூறுகையில் ” நகருக்குள் ஹைமாஸ் அமைக்கப்பட்ட எல்லா இடங்களிலும் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  இந்நிலையில் இன்னொரு விளக்கு என்பது அத்தியாவசியமானது தானா ? என்பதையும் அதிகாரிகள் யோசித்து,  அது பழுதானால் உடனே சரிசெய்து மக்கள் பயன் பெறவும் வழிசெய்ய வேண்டும் “என்றார்.

தெற்கு தெரு முன்னாள் கவுன்சிலர் அ.மு.என்ற காதர் சாகிபு கூறுகையில் “தெற்கு தெரு ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. புகார் மனு பல எழுதியும் பலன் ஏதுமில்லை. ” என்றார்.   இதுசம்பந்தமாக
நகராட்சி மின் ஊழியர்களிடம் கேட்டதற்கு “இன்று அமைக்கும் ஹாமாஸ் LED விளக்குகளால் ஆனது. இந்த விளக்கு பழுதானால் நாங்களே சரி செய்து விடுவோம். ஆனால் ஏற்கனவே எரியாமல் உள்ள விளக்குகளை சரிசெய்ய சென்னை நபர்கள் வர வேண்டும் ” என்கிறார்.

நகராட்சியில் இருந்து பல மாதங்களாக இதே பதில் வருவதால் இன்று இரவு 08.30 மணி அளவில், மக்கள் டீம் சார்பாக, தெற்குத் தெரு ஹைமாஸ் விளக்கு முன்பாக மெழுகு திரி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: மக்கள் டீம் :

3 Comments

  1. கீழக்கரை டூரிசம் சுற்றுலா அமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு கோரிக்கை மனுவும் கொடுத்து “பழைய பேருந்து நிலைய கடற்கரையில் ஹைமாஸ்ட் விளக்கு பொறுத்த மற்றும் கழிப்பறை அமைக்க” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மதிப்பீடு தயார் செய்யப்பட்டுவிட்டது. குப்பையில் கிடக்கின்ற ஹைமாஸ்ட் விளக்கு மின்கம்பம் எங்களது முயற்சியால் விரைவில் நிலைநிறுத்தப்படும். மனுவின் எண் : 2018/9005/27/504994/0709

    • பல பேர் முயற்சி எடுத்துள்ளார்கள், நீங்களும் இப்பொழுது முயற்சி எடுக்குறீர்கள், மக்கள் நலன் கருதி பொருத்தினால் நலம்தான்..

  2. பழைய பேருந்து நிலைய கடற்கரையில் ஹைமாஸ்ட் விளக்கு பொறுத்த இருக்கும் இடத்தின் அருகே தற்சமயம் மக்கள் நலன் கருதி ஓரிரு தினங்களில் தெரு விளக்கு பொறுத்த நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் கட்டடக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள், மலக்கழிகளை அவ்விடம் கொட்டதவாறு எச்சரிக்கை பலகையும் பொறுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நமது ஊர் மக்களும் வியாபாரிகளும் தொழிலாளர்களும் பொது நலன்கருதி கழிவுகளை கண்ட இடத்தில் போடாமல் அதற்கென அமைக்கப்பட்ட குப்பைதொட்டிகளில் போட்டு சுகாதாரத்தை பேணுமாறும், இந்த கீழை நியூஸ் இணயப்பக்கத்தின் கருத்துபகுதியின் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Comments are closed.