Home செய்திகள் கொரிய ஆசிய விளையாட்டு போட்டியில் கத்தார் வீராங்கனைகள் இஸ்லாமிய உடை அணிய மறுக்கப்பட்டதால் விளையாட்டில் இருந்து வெளியேறினர்..

கொரிய ஆசிய விளையாட்டு போட்டியில் கத்தார் வீராங்கனைகள் இஸ்லாமிய உடை அணிய மறுக்கப்பட்டதால் விளையாட்டில் இருந்து வெளியேறினர்..

by ஆசிரியர்

கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாடநடுவர் தடை விதித்தார்.

அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையில்  நடந்த நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி மறுத்ததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது பெண்கள் அணி. போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும், மார்க்கமும் முக்கியம் என கருதி வெளியேறிய கத்தார் வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வுலக வெற்றியை விட இறைவனின் மறுமை வெற்றியே பெரிதானது. இவ்வுலக தோல்வி கால் செருப்பு கூட சமமில்லை. இறைவனிடம் வெற்றிப்பெற்றது கத்தார் பெண்கள் அணியே என்று உலக முஸ்லிம்களின் சார்பாக அறிவிக்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!