மண்டப திமுக நிர்வாகிகள் சென்னையில் அஞ்சலி..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் திமுக தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி மறைவையொட்டி மண்டபம் பேரூராட்சியில் நகர் செயலாளர் டி.இராஜா தலைமையில் நடைபெற்றது.

இப்பேரணியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நகரின் முக்கிய வீதிகளான அண்ணா கடை வீதி, மார்க்கெட் தெரு, தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து நகரில் அண்ணா கடை வீதியில் உள்ள கலைஞர் படிப்பகத்திற்கு வந்து அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த மவுன ஊர்வலத்தில் சம்பத்ராஜா, பூவேந்திரன், காந்தகுமார், நம்புராஜன், சாதிக் பாட்சா, அயூப்கான், பக்ருதீன், ஆதம், வெள்ளைச்சாமி, இரவி, ஹாஜா, MLA என்ற இரகுமான், ஆனந்த், தில்லை , மற்றும் காங்கிரஸ் கருப்பையா மற்றும் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு அனைவரும் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம் சென்று வந்தனர்.

பின்னர் 09-08-18 அன்று மாலை மண்டபம் திமுக வினர் ஊர்வலமாக சென்னை சென்று இன்று 10-08-18 அன்று காலை 10 மணியளவில் மெரினாவில் கலைஞரின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.