வரம் தந்த முத்துமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு முளைப்பாரி விழா..

இராமநாதபுரம் மாவட்டம் வயலூர் வரம் தந்த முத்துமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. இதை முன்னிட்டு ஜூலை 31 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதையொட்டி தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது.

அன்று மாலை அம்மன் கரகம் குளக்கரையில் எடுத்து கோயில் வந்தது. நேற்று காலை அம்மன் கரகம் வீதி சென்றது. பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். மாலையில் அம்மன் கரகம் முன் செல்ல முளைப்பாரி ஊர்வலமாக சென்று குளத்தில் கரைக்கப்பட்டது. இக்கோயில் குளுமை பொங்கல் 14/8/18 மாலை நடக்கிறது.