450 ஆண்டு பழமை கொண்ட நாகூர் தர்ஹாவை சிறப்புக்கும் வண்ணம் தபால் தலை வெளியிட தமிழக எம்.பிக்கள் கோரிக்கை மனு..

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியமானதும் பிரசித்து பெற்றதுமான தமிழ் நாட்டில் உள்ள நாகூர் ஆண்டவர் ஹஜரத் செய்யது அப்துல் காதர் என்ற சாகுல் ஹமீது தர்ஹா ஆகும். இந்த தர்ஹா சுமார் 450 ஆண்டு கால பழமை வாய்ந்த தர்ஹா ஆகும். இந்த தர்ஹாவிற்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் மிகப் பிரசித்து பெற்றதாகும். இந்த தர்ஹா தமிழ்நாட்டின் கடற்கரை நகரான நாகபட்டினத்தில் அமைந்துள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் கந்தூரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்புக்குரியது. வரும் ஆண்டுக்கான கந்தூரி விழா வரும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த நாகூர் ஆண்டவர் ஹஜரத் செய்யது அப்துல் காதர் என்ற சாகுல் ஹமீது தர்ஹாவின் 450 ஆண்டுகால கந்தூரி விழாவை ஒட்டி எதிர்வரும் பிப்ரவரி 2019ல் தர்ஹா படம் பொறித்த ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை வெளியிட வேண்டும் என வக்பு வாரியத தலைவர் அ.அன்வர் ராஜா MP தலைமையில் டாக்டர் மு.தம்பிதுரை, கொறடா டாக்டர்.வேணுகோபால் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அருண் ஜெட்லி, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை சந்தித்து, அ.இ.அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை வழங்கினார்.