கீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பணியாளர்கள்..

கீழக்கரை நகராட்சியின் பெரும் குறையாக இன்றளவும் சுகாதாரம் இல்லை என்பதில் யாரும் மாற்று கருத்து கொள்ள முடியாது.  இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என பல திசையில் இருந்து நெருக்கடி கொடுத்ததின் விளைவாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன்  உத்தரவின் பேரில்  கூடுதலாக 55 நபர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் மூலம் தினந்தோறும் வீதிகளை சுத்தப்படுத்தி, வீடுதோறும் குப்பைகளை எடுக்கும் பணிகள மேற்கொள்ளப்படும் என அறியப்படுகிறது.

இதுகுறித்து இன்று கீழக்கரை அலுவலகம் வந்த ஆணையாளரிடம் கேட்டதற்கு “முதற்கட்ட நடவடிக்கையாக குப்பைகளை வீடுகளுக்கு சென்று எடுக்கும் நடைமுறை ஒரு சில பகுதிகளில் இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளனர். படிப்படியாக எல்லா பகுதிகளிலும் குப்பை எடுக்க இன்னும் ஒரு வாரகாலம் ஆகும் என்றும், நகராட்சி பணியாளர்கள் அதிகாலை நேரத்தில் வருபவர்கள் என்பதால், குப்பை எடுக்கும் நேரத்தை அறிந்து கொண்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், மேலும் கீழக்கரை நகருக்குள் இன்னும் 10 நாட்களுக்குள் மாற்றத்தை காணலாம் என்றும் சுகாதாரம் குறித்த எந்த ஒரு நகராட்சி பணிகளுக்கும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உடனே நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்” என கூறினார்.

ஊரின் நலன் சுகாதாரம் மூலம் மேன்பட்டால், ஆணையாளர் நாராயணனுக்கு , ஊரார் ஒருங்கிணைந்து பாராட்டு விழா நடத்த மக்கள் டீம் சார்பாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அவ்வமைப்பின் அப்துல் காதர் கூறினார்.

தகவல் : மக்கள் டீம் :

2 Comments

  1. இப்படியே ஊருக்குள் வருகின்ற அதிகாரிகளுக்கு கூஜா தூக்கியே அவர்களை கெடுக்காதீர்கள் அவர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டுமோ அப்படி வேலைய வாங்க பாருங்கள். எப்போ பார்த்தாலும் பொன்னாடை போர்த்துவத்திலே இருக்காதீங்க பாஸ்

  2. அப்றம் மாறி மாறி ஆட்சி செஞ்ச தி.மு.க. மற்றும் அ.தி.மு.க நகர் மன்ற தலைவர்கள் என்ன கிழித்தார்கள் அப்போலாம் சுகாதாரம் மேம்பட்டதோ? நகராட்சி நிதியை வீணடித்தார்கள் மற்றும் எவ்வளவோ… ஆகையினால் கீழக்கரை மக்களே கட்சி சார்ந்தவர்களுக்கு இந்த முறை வாக்கழிக்காதீர்கள் நல்ல சுயேட்சை வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் அப்போதான் எப்போ வேண்டுமாலும் நீங்கள் சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம் அவர்களுக்கு அரசியல் பின்புலம் இருக்காது பயமும் தேவையில்லை.

Comments are closed.