இலங்கை வடக்கு மகாணத்தில் கலைஞருக்கு அஞ்சலி ..

முத்தமிழ் பேரறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 129வது அமர்வு இன்று காலை துவங்கிய போது தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார்.

இதை தொடர்ந்து இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கருணாநிதி மறைவு குறித்து அஞ்சலி உரை நிகழ்த்தினர். இந்த உரை கருணாநிதி குடும்பத்தாருக்கு அனுப்பப்படவுள்ளது.