நிலக்கோட்டையில் மொட்டையடித்து கலைஞருக்கு அஞ்சலி ..வீடியோ பதிவு..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தி.மு.க சார்பாக தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. சாமியானாவால் அரங்கம் அமைக்கப்பட்டு அதில் பெரிய திரையில கருணாநிதி இறுதி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. கருணாநிதி பெரிய உருவப்படம் மலர்களால் மேடை அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு பேருர் துணை செயலாளர் ஜோசப், தி.மு.க நிர்வாகிகள் மணிராஜா, முருகேசன், முத்துராஜா ஆகியோர் தலைமை வகித்தனர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். இரங்கல் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பாக சேகர், அ.ம.மு.க சார்பாக சரவணன், தங்கப்பாண்டியன், சி.பி.எம் சார்பாக சௌந்தரராசன், காங்கிரஸ் சார்பாக நடராஜன், கோகுல்நாத், ஆதிதமிழர் கட்சி சார்பாக ராமன், தே.மு.தி.க சார்பாக வௌ;ளச்சாமி, பி.ஜே.பி.சார்பாக கிருஷ்ணகுமார் உள்பட பலர் பேசினர். 12 பேர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். முடிவில் தி.மு.க ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார். முன்னதாக அமைதி ஊர்வலம் நடந்தது. அதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.