Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இன்று (09.08.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இன்று (09.08.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

by ஆசிரியர்

இன்று (09.08.2018) மாவட்ட ஆட்சித் தலைவர்முதலாவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கமுதக்குடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வெங்காளுர் ஊராட்சிக்கு நேரில் சென்று வெங்காளுர் மற்றும் சங்கன்கோட்டை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அதில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சி மற்றும் சரியான எடை உள்ளனவா என்பது குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார்.

மேலும் சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும்பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்திடுமாறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அக்கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், சமுதாயகூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்து கொடுக்குமாறும், அங்கன்வாடி கட்டிடத்திற்கு உடனடியாக மின்வசதி சரிசெய்து கொடுக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கிராம பொதுமக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு நல்ல சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக ஒரு பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வழிகாண வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்கள்.

பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சாலையைப் பொருத்தவரை சங்கன்கோட்டையிலிருந்து நண்டுபட்டி சாலை அமைக்க ரூ.1.21 கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு இரண்டு சாலைகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் தரமான சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிர்வாக அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அதற்கான பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். அதேபோல குடிநீரை பொருத்தவரை நிலத்தடிநீர் உப்பாக உள்ளபடியால் ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிய சுழு Pடயவெ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் பள்ளி குழந்தைகள் செல்வதற்கான பாலத்தை நிறைவேற்றிட அனுமதி கொடுக்க ஏதுவாக உடனடியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!