சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு..

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் குறித்து ஐ.ஜி பொன்மாணிக்க வேலுவின் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள  நிலையில் டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டுள்ளதாகவும், உற்சவர் சிலையும், பழங்கால பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் புகார்  அளித்திருந்தார். அந்த மனுவில் தனியார் உதவியுடன் கோவில் பிரகாரம் புணரமைக்கப்பட்டதிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ரங்கராஜன், இது தொடர்பாக பல முறை புகாரளித்தும் காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த புகார் தொடர்பாக விசாரித்து 6 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிபதிகள் மகாதேவன்,ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் குறித்தும் கோவில் புனரைப்பு முறைகேடு குறித்தும் சிலை கடத்தல் ஐஜி பொன் மாணிக்க வேல் நாளை விசாரணையை தொடங்க உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த டிவி சுந்தரம் அய்யங்காரின் பேரனும் டிவிஎஸ் குழுமங்களின் தலைவருமான வேணு சீனிவாசன், தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.