முளைப்பாரி விழாமுளைக்கொட்டு திருவிழா..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை (வடக்கு) முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா 2 நாள் நடைபெற்றது. அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்து பெண்கள் ஊர்வலம் சென்றனர் . இளநீர் காவடி எடுத்தும் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

துரைச்சாமி குழுவினரின் இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது . அம்மன் கரகம் முன் செல்ல முளைப்பாரி ஊர்வலமாக சென்று ஊரணியில் கரைக்கப்பட்டது. கிராமத்தலைவர் நவநீதன் தலைமையில் கிராமத்தினர் விழா ஏற் பாடுகளை செய்தனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image