பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கார், வேன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இராமநாதபுரத்தில் நேற்று (07/08/2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் சண்முகநாதன், செயலாளர் பக்கீர் முகமது, ராமநாதபுரம் தாலுகா மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் சங்க தலைவர் சேதுபாண்டியன், தாலுகா செயலாளர் ராமச்சந்திரன், இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்ட செயலாளர் குமாரவேலு, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் சிவாஜி, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை மாவட்ட செயலாளர் வின்சென்ட் அமலதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். சிறு, குறு வாகன உரிமையாளர்களின் பராமரிப்பு தொழிலை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை அரசு விலக்கி கொள்ள வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகன காப்பீடு தொகையை கட்டுப்படுத்த வேண்டும், டோல்கேட்களில் கூடுதல் கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..