கீழக்கரையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம்..

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கீழக்கரையில் திமுக சார்பாக அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த ஊர்வலத்திற்கு எந்த வித பாகுபாடுமின்றி பல தரப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் கீழக்கரை – ஏர்வாடி  முக்கு ரோட்டில் தொடங்கி கீழக்கரையின் முக்கியமான வணிக சந்திப்பான முஸ்லிம் பஜார் தொடங்கும் சாலையில் முடிவடைந்தது. நிகழ்வின் இறுதியாக அனைத்து தரப்பட்ட அமைப்புகள், கட்சிகள், சங்கங்கள் சார்பாக கலைஞரை பற்றி சில வார்த்தைகள கூறி அஞ்சலி செலுத்தினர்.

தகவல்: மக்கள் டீம் :