தூய்மை இந்தியா திட்டம் கீழக்கரைக்கு விதி விலக்கா?? நாறி கிடக்கும் தெருக்கள்..

கீழக்கரை நகராட்சி இருந்தும், பகுதி நேர ஆணையர் போலவே அங்குள்ள செயல்பாடுகளும் முறையில்லாத வகையில் செயல்பட்டு வருகிறது.  கீழக்கரை நகராட்சியில் சுகாதாரம் என்பது ஒரு பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.
கீழக்கரையில் சொக்கநாதர்  ஆலயம் எதிர்புரம், மேலத்தெரு செய்யிதினா அபுபக்கர் சித்திக் பள்ளி வாசல்  பகுதி, வடக்குத் தெரு CSI பள்ளி பகுதி, கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும் வழி, புதுக்குடி, வண்ணாங்குடிருப்பு, தட்டாந்தோப்பு,  சதக்கதுல்லா அப்பா வளாகம் பின்புறம் மற்றும் இன்னும் பிற  பகுதிகளிலும்  குப்பை கிடங்குகள் நிறைந்த பகுதிகளாக  காட்சியளிக்கின்றது.
நமது  பாரத பிரதமரின் தூய்மை இந்தியா  என்ற வார்தை முழக்கம்  ஏட்டு சுரக்காய் போல்  நகராட்சின் முன்பு கம்பீரமாக காட்சியளிக்கின்றது .  இந்த தூய்மை  இந்தியா  என்ற  முழக்கம் எப்பொழுது நடைமுறைக்கு வர போகின்றது என்பது தான் சமூக ஆர்வலர்களின் ஏக்கம்.
அதே சமயம் தனி மனிதன் ஒழுக்கம் இல்லாதது தான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தாலும், நகராட்சியும் தான் செய்ய வேண்டிய பணியை முழுமையாக செய்தால் நிச்சயம் மாற்றம் வரும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. கீழக்கரை நகராட்சி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றுதான், அதிலும் பொது சுகாதார பிரிவு ரொம்ப மோசம் இந்த பிரிவை கலைக்க சொல்லி யாராவது மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தால் நல்லது அப்பதான் ஒழுங்கா வேலை செய்வானுவோ, அப்புறம் தூய்மை இந்தியா என்பதே வெறும் வேஷம்தான்.

Comments are closed.