35 ஆண்டு காலம் தாயகம் செல்ல முடியாமல் தவித்தவரை ஊருக்கு அனுப்பி வைத்த இந்தியன் சோசியல் ஃபோரம்..!!

தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரைனுக்கு வேலை செய்வதற்காக வந்தார். பிறகு கம்பெனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் விசாவின்றி பஹ்ரைனில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் வருடங்கள் உருண்டோடிட ஊருக்கு செல்ல விரும்பிய ஷேக் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் இந்திய குடிமகன் என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் மூலம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய மிகவும் வருத்தத்திற்குள்ளாகி அவருக்கு உடல் நிலையும் சரி இல்லாமல் போனது.
இறுதியாக தமிழகத்தை சேர்ந்த சிலரால் இவ்விஷயம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் பஹ்ரைன் நிர்வாகிகள் கவனத்திற்கு வர அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து மேலும் தாயகத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து முயற்சிகளையும் இந்திய தூதரகத்தின் துணையுடன் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
இந்த முயற்சியில் நாட்டிற்கு செல்வதற்கான விமான டிக்கட் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தனர். 35 வருடங்கள் கழித்து இன்று காலை 03.08.2018 சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்தடைந்தார் ஷேக்.
பெரியவர் ஷேக் அவர்களை நல்லமுறையில் கவனித்து பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைத்த பஹ்ரைன் இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கு சவூதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..