கீழக்கரையில் நகராட்சி ஆணையர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்தாய்வு கூட்டம்..

கீழக்கரை உசைனியா மஹாலில் நேற்று (01/08/2018)  நகராட்சி ஆணையர் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் கடைக்காரர்கள் விற்பனை செய்வது குறித்து பல குளறுபடிகள் பற்றி விவாதிக்கப்பட்டது, மேலும் எந்த வகையான ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த ஆணையர் நாராயணன் (பொறுப்பு) ” இன்னும் அரசு எங்களுக்கு முறையான தகவலாக G O அனுப்பவில்லை. துணிப்பைகளின் விற்பனையை ஆரம்பித்தால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வழிவகுக்கும் “என்றார்.

மேலும் அதைத் தொடர்ந்து வர்த்தகர்கள் சம்பந்தமான பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.  இதில் ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: மக்கள் டீம் :

புனித ரமலான் வாழ்த்துக்கள்..