Home செய்திகள் ஸ்மார்ட் போண் மற்றும் இணையதளம் மூலம் வருவாய்துறை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி..

ஸ்மார்ட் போண் மற்றும் இணையதளம் மூலம் வருவாய்துறை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுசேவை மையங்கள் மூலமாக தற்போது  வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் 20 விதமான சான்றிதழ்கள், பட்டாமாறுதல்  மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள்  வழங்கப்பட்டு வருகின்றன. பொது சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வரும் விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிடசான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்துமதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி /கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிடம் / இருப்பிடசான்றிதழ்,  முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்டபெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய வருவாய்த்துறை சான்றிதழ்களின் சேவைகளை தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில்  விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட 20 சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/Citizen என்ற  இணையதள முகவரியில் தங்களைப் பதிவு செய்து தங்களுக்கான பயனர் பெயர் (User name) பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான வழிமுறைகள் https://www.tnesevai.tn.gov.in/videotutorial.html மற்றும் https://www.tnesevai.tn.gov.in/usermanual.html ஆகிய  இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் UMANG என்னும் ஆன்ராய்டுசெயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமான வரி சான்றிதழ், சாதிசான்றிதழ், பிறப்பிட / இருப்பிடசான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் கைப்பேசி  மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இதற்கான சேவைகட்டணமாக ரூ.60/-ஐ  இணையதள வங்கிமுறை  (INTERNET BANKING)   அல்லது கிரெடிட்ஃடெபிட் (CREDIT OR DEBIT CARD) அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!