டிராக் வியூ வலையில் சிக்கிய பெண்கள் .கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது.. விழிப்புணர்வு பதிவு …

ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய டிராக் வியூ செயலியை பதவிறக்கம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விவகாரங்களை படம் பிடித்து மிரட்டிய இராமநாதபுரம் கம்ப்யூட்டர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்த வாலிபரை செமத்தியாக கவனித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் இழுத்து வந்தனர். 24 வயது வாலிபரான தினேஷ் குமார். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்வில் விளையாடிய விபரீத சைக்கோ என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற தினேஷ்குமாரிடம் வெளி நாட்டில் வேலை பார்க்கும் கணவர் அனுப்பிய ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார் அப்பெண் அந்த் போனில் டிராக் வியூ என்ற செயலியையும் தினேஷ் குமார் பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளார். டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை தினேஷ் குமார் செய்துள்ளான்.

அந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அனைத்து அந்தரங்க விவகாரங்களையும் தனது டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் தினேஷ் குமார் பதிவு செய்துள்ளான். அந்த பெண் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ, போட்டோக்களையும் பதிவு செய்துள்ளான். இவன்ற வைத்துக் கொண்டு, தான் யார் என தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். இல்லாவிடில் அந்தரங்க காட்சிகள், போட்டோக்களை ஆன் லைனில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளான்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாது திகைத்த அப்பெண் இந்த விவகாரம் குறித்து தனது சகோதரரிடம் தெரிவித்தார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என  தினேஷ்குமாரின் செல்போனுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினார்.

இதை நம்பி தினேஷ் குமார் அங்கு வந்தான் அவனை பார்த்ததும் அப்பெண்ணின் சகோதரர். உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவு முறையில் தினேஷ் குமார் அப்பெண்ணுக்கு தம்பி என்பது தான் அதிர்ச்சிக்கு காரணம்.

தினேஷ் குமாரிடம் விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ, போட்டோக்களை டிராக் வியூ செயலி மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என தெரிந்தது. இதை தொடர்ந்து தினேஷ் குமாரை செமத்தியாக கவனித்து போலீசில் ஒப்படைத்தனர். தினேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவனது வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் இருந்து 2 லேப் டாப் , 3 செல்போன் , 10 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆடைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில்,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக வேலை பார்த்த போது கல்லூரி மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அப் பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததையடுத்து தினேஷ்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் இவர் மீது புகார் அளிக்க முன் வரவில்லை.

இதன் பிறகு தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரின் ஸ்மார்ட் போனை் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் லேப் டாப் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான் அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களின் வீடியோக்களை ஆன் லைன் மூலம் வெளி நாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகி்றது. தினேஷ்குமார் வெளி நாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான் இதனால் அவனை யார் என அடையாளம் காண முடியாமல் பெண்கள் பலர் தவித்துள்ளனர்.

இவனது ஒரு லேப்டாப்பில் இருந்து மட்டும் 80க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகள், 140க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க உரையாடல்களை கண்டு போலீசார் அதிர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என போலீசாரால் கூறப்படுகிறது. இதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்கள், கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்கு பதிந்து தினேஷ்குமாரை கைது செய்தார். பெண்கள் தங்களின் ஸ்மார்ட் போனை மூன்றாம் நபரிடம் கொடுத்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பது இது போன்ற சம்பவத்தால் தெரிகிறது. பெண்கள் யாரும் எக்காரணம் கொண்டும் தங்களது ஸ்மார்ட் போனை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்பதற்கான விழிப்புணர்வு பதிவே இது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..