பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு கட்டாயம்.. ஏழை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமங்கள் அறியாத உத்தரவு என கருத்து..

சமீபத்தில் இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கணக்கு திறத்தல் அவசியம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில்  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தேரடி அறிவுரைகளை மேற்கோளிட்டு, RANNAD CEO மூலம் போடப்பட்டுள்ள செயல்முறைகளின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் LKG to XII Std வரை பயிலும் அனைத்து தரப்பு (OC ,BC ,MBC , SC ,ST) மாணவ – மாணவிகளுக்கும், பள்ளி அருகிலுள்ள வங்கியில் SB AlC தொடங்கும் பணிகளை அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைமுறையில் வங்கி கணக்கு மூலமே கல்வி உதவித் தொகை பெற தகுதியுடைய (MBC Girls , SC Girls ) மாணவி களுக்கு SB A/C open செய்து, அரசின் உதவித் தொகையை பெற்று   வரும் நிலையில், அதற்கு அவசியம் அல்லாத அனைத்து தரப்பு மாணவர்களையும் வங்கி கணக்கு திறப்பு வலியுறுத்துவது, இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களையும் வைத்து பள்ளி நடத்தும் தலைமை ஆசிரியர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை.

மேலும் தற்சமயம் கல்வி துறையில்  Team  Visit என்ற நெருக்கடி சூழலில் இது ஒரு கூடுதல். சுமையாகும்.  மேலும் வங்கி கணக்கு திறக்க குறைந்த பட்ச தொகை ரூ 500 /- ஐ (500-க்கு குறைந்தால் வங்கி கம்யூட்டர் அனுமதிக்காது) உடனடியாக அரசுப் பள்ளிகளில் பயிலும் , பொருளாதார வசதியில்லாத பெற்றோர்களால் உடனே வழங்க முடியுமா …?. அதைத்தொடர்ந்து  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வங்கியில் சென்று படிவங்களை வாங்க வேண்டும், மாணவர்களிடம் போட்டோ, ஆதார் கார்டு ஜெராக்ஸ், பின்பு அனைத்துப் படிவங்களையும், KYC Forms களையும்அனைத்து மாணவர்களுக்கு Fil செய்ய வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் , கல்விச்சான்று தயார் செய்து கையெழுத்திட வேண்டும். இப்பணிகள் எல்லாம் பள்ளிகூட கல்வி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

ஈராசிரியர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் நிலை பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ள சூழல் …. இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாக வழிவகை செய்யுமா ….?

புனித ரமலான் வாழ்த்துக்கள்..