மடிகணினி திருட்டு..மதுரை சோதிடர் கைது..

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே சக்தி மங்கலம் எல் கே பி நகரைச் சேர்ந்த சோதிடர் மாரியப்பன், 47. ஊர் ஊராக சென்று சோதிடம்  பார்க்க கூடியவர்.

இவர் கடந்த ஜூலை 16 மதியம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழத்தூவல் அருகே பொசுக்குடி கிராமத்திற்குச் சென்றார். அங்கு ஆதிமூலம் என்பவரது வீட்டிற்குள் புகுந்து மேஜை மீது இருந்த மடி கணியை திருடிச் சென்றார். இது குறித்து ஆதிமூலம் புகார்படி மாரியப்பனை கீழத்தூவல் எஸ்.ஐ., பழனி கைது செய்தார்.