Home செய்திகள் கீழக்கரையில் புதிய ஆணையர் கோரிக்கை வைத்த மக்களுக்கு .. கிடைத்தது புதிய மேலாளர்.. பிரச்சினைகள் தீருமா??

கீழக்கரையில் புதிய ஆணையர் கோரிக்கை வைத்த மக்களுக்கு .. கிடைத்தது புதிய மேலாளர்.. பிரச்சினைகள் தீருமா??

by ஆசிரியர்

கீழக்கரை நகராட்சி தலைமை இல்லா ஆட்சிபீடம் போல் நகராட்சி ஆணையாளர் இல்லாமல் கடும் நிர்வாக பிரச்சினைகள் மற்றும் முடிவெடுத்தலில் தாமதத்தால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தார்கள். மேலும் பரமக்குடி ஆணையாளர் கூடுதல் பணியாக (பொறுப்பு) நிர்வாகித்து வந்தார், அவர் எப்பொழுது வருவார்க என்பது கீழக்கரை மக்களுக்கு ஒரு ரகசியமாகவே இருக்கும்.  ஆனால் கீழக்கரை நகராட்சி  தலைமை எழுத்தர் மட்டுமே நடைமுறையில் நகராட்சியை நிர்வாகித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று (31/07/2018) முதல் கீழக்கரை நகராட்சிக்கு ஆணையாளர் நியமனம் செய்யாமல் அவ்வேலைகளை கவனிக்க மேலாளராக தேவகோட்டையை சேர்ந்த தனலெட்சுமி என்பவரை அரசு நியமித்துள்ளது.

இது அரசால் செய்யப்படும் ஒரு கண்துடைப்பு வேலை என்றே கருதப்படுகிறது.  காரணம் மேலாளராக நியமிக்கப்பட்டு இருப்பவருக்கு நிச்சயமாக ஆணையருக்கு உள்ள முடிவெடுக்கும் அதிகாரம் இருக்குமா என்பதும் ஒரு பெரிய கேள்வி குறி, அவ்வாறு அதிகாரம் இல்லாத பட்சத்தில் நகராட்சியில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் மூத்த அலுவலர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புண்டு, ஆகையால் தமிழக அரசு மக்களுக்கு ஆணையர் மற்றும் மேலாளர் அதிகார வரம்புகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்களும் இந்த விசயத்தில் களம் இறங்கி மக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!