எங்கே செல்கிறது நம் பத்திரிக்கை சமுதாயம்…

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை துறை. ஆனால் அந்த நான்காவது தூணை மற்ற துணை தூண்களே சேதப்படுத்த எத்தனித்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். சமீபத்தில் பிற நிருபர்கள் எடுத்த நிலைபாட்டுக்கு ஒத்து வராத ஒரு நிருபரை மற்ற நிருபர்கள் தாக்கிய சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தேனி பிரஸ் கிளப் செயலாளர் மற்றும் சத்தியம் டிவி மாவட்ட நிருபர் ஒருவர் சக நிருபர்களால் பொதுமக்கள் மத்தியில் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது மற்றும் வருந்ததக்க செயலாகும். அதே போல் சில வாரங்களுக்கு முன்பு செய்தி சேகரிக்க சென்ற சட்டம் ஒழுங்கு பத்திரிக்கை மற்றும் இன்றும் பிற நிருபர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிந்த பொழுது, சக பத்திரிக்கை நிருபர் ஒருவர் அவர் பணியாற்றும் பத்திரிக்கையில் “போலி நிருபர் கைது” என செய்தி வெளியி்ட்டது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒற்றுமையில்லாமையை வெளிச்சம் போட்டதுடன், சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் நடுநிலைமை தன்மையையும் கேள்விகுறியாக்கி விட்டரர் என்பதுதான் நிதர்சன உண்மை…

ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி??. ஒற்றுமமையாக இருந்து சமுதாயக் கேடுகளை களைய வேண்டியவர்களே தமக்குள் அடித்துக் கொள்ளும் அவலம் ஏன்??. பத்திரிக்கை துறை என்பது சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மாறி, சுய லாபத்துக்காக இத்துறையையும் லாபகரமான வியாபார துறையின் நிலைக்கு கொண்டு சென்றதன் விளைவு. அதே போல் பத்திரிக்கை துறைக்கு வருபவர்கள் வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது என்ற மன நிலையில் என்றும் வாளை தூக்கி பிடித்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்று சமூக வலைதளங்கள் பெருகிய நிலையில், அந்த வலைதளத்தில் ஒரு கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் தானும் ஒரு பத்திரிக்கையாளன் எனற வேசம் பூண்டதும் ஒரு முக்கிய காரணம். அதன் விளைவு சில காலங்கள் முழு வீச்சில் மக்கள் மத்தியில் செய்திகளை கொண்டு சென்று விட்டு, மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டு பொழுது போக்காக அதை கைவிட்டு விட்டு செல்வது. இது போன்ற செயல்பாடுகளும் பத்திரிக்கை துறையின் ஸ்திரத்தன்மையை உரசிப் பார்க்கிறது என்றால் மிகையாகாது. அதற்கு கடந்த சில வருடங்களில் பத்திரிக்கை தளம் என தொடங்கி சில வருட, மாதங்களிலேயே உருமாறி அல்லது தடம் மறைந்து போனதும் இதற்கு சாட்சி.

நிச்சயமாக பத்திரிக்கை துறை என்பது கண்ணியமிக்க துறையாகும், ஆகையால் இத்துறைக்கு வருபவர்கள் இத்துறையால் நமக்கு என்ன லாபம் என்று சிந்திப்பதை விட, இத்துறைக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று சமூக சிந்தனையுடன் வரும் பொழுது பத்திரிக்கை துறையின் நோக்கம் நிறைவேறும் என்பதில் ஐய்யமில்லை..

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal