மாற்று திறனாளிகளுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் – மாநாட்டில் தீர்மானம் ..

அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை மற்றும் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வங்கிகளில் மாணியத்துடன் சுய தொழில் துவங்க கடன் அளிக்கவும் – தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டுமென காட்பாடியில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம்.

வேலூர்மாவட்டம், காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநாடு மாவட்ட செயலாளர் கோபாலராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இதனை மாநிலதலைவர் ஜான்சிராணி கொடியேற்றி துவக்கி வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தங்களின் உபகரணங்களுக்கு கூட மத்திய அரசு ஜி.எஸ்டி வரி விதித்ததை கண்டித்தும், மாநில அரசு உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.


பின்னர் நடைபெற்ற மாநாட்டில் 40 சதவிகித ஊனமுள்ள அனைத்துவகை மாற்று  திறனாளிகளுக்கும் மாத உதவிதொகை அரசு வழங்கவேண்டும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் படி 100 நாள் வேலை மாற்று  திறனாளிகளுக்கும் பணி அளிக்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகை குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், பெண் மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள் மீதான் பாலியல் வன்முறையை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், 60 மாற்று  திறனாளிகளுக்கான திட்டங்கள் தமிழகத்தில் இருந்தும், அதனை முறையாக செயல்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசைகண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவும் உள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..