விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் தோட்டக் கலைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு ‘காய்கறி பயிர்கள் விதை உற்பத்தி” தொடர்பான பயிற்சி..

இராமநாதபுரம் மாவட்டம்,  இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று (30.07.2018) விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் ‘காய்கறி பயிர்கள் விதை உற்பத்தி”  தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கினைத் துவக்கி வைத்தார்.  

இக்கருத்தரங்கினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மத்திய அரசு விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் (Krishi Kalyan Abiyan ) திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்களைத் தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை நூறு சதவீதம் நிறைவேற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக மண்வள அட்டை வழங்கும் திட்டம், நுண்ணுயிர் பாசன திட்டம் போன்ற திட்டங்களை முழுமையாக செயல்படுத்திடவும், வேளாண் உற்பத்தி, வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு செய்து சந்தைப்படுத்துதல், வேளாண் பணிகளில் குறைந்த செலவில் அதிக இலாபம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகள் நடத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

​வேளாண்மைப் பணிகளுக்கு தரமான விதைகளே முக்கிய ஆதாரமாகும். அந்தவகையில் இன்றைய தினம் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக காய்கறி பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பாக விவசாயிகளுக்கான  ஒரு நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.  தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் சத்தான பயிர் வகைகளை பெற முடியும்.  அதேபோல விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மண்பரிசோதனை செய்து மண்வள அட்டை பெற வேண்டும்.  இதன் மூலம் இரசாயன உரங்களைத் தவிர்த்துää மண்ணிற்கேற்ற இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.  இத்தகைய நடைமுறைகளில் நுண்ணுயிர் பாசன திட்டத்தினை பயன்படுத்துவதன் மூலம் மண்வளத்தை பாதுகாப்பதோடு குறைந்த அளவு தண்ணீரில் இருமடங்கு மகசூல் பெறலாம்.

 

​இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை சரியான முறையில் மதிப்புகூட்டு செய்து முறையாக சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் இருமடங்கு இலாபம் பெறலாம்.  விவசாயிகள் சிரமமின்றி தங்களது வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மாநில அரசின் மூலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  அதேபோல மாநிலங்களில் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள சந்தைகளை ஒருங்கிணைத்து, அகில இந்திய அளவில் இணையதளம் வாயிலாக இணைத்து வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக தேசிய வேளாண் சந்தை (National Agricultural Market ) துவங்கப்பட்டு e-Nam  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதுபோன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நாட்டு மிளகாய்,  முள்ளங்கி, வெந்தயக்கீரை, பாலக்கீரை, அவரை, வெண்டைக்காய் என 6 விதமான பயிர் விதைகள் அடங்கிய  பைகளை வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) தஎல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் (பொ) ஜே.ராஜேந்திரன், துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) ஷேக்அப்துல்லா, தேசிய விதைகள் உற்பத்தி கழக உற்பத்தி பிரிவு மேலாளர் எம்.வெங்கடேஷ், மண்டல மேலாளர் மதன்மோகன்ராம், மதுரை பகுதி மேலாளர் செல்வேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..