அனைத்து பணிக்கும் நகராட்சி தேவையில்லை – களத்தில் இறங்கிய அல் அமீன் சகோதரர்கள் ..

இன்று (30/07/2018) சில மணிக்கு முன்னால் சாக்கடையில் கலக்கும் குடிநீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  அச்செய்தியை பார்த்தவுடன் கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் அமைப்பைச் சார்ந்த சகோதரர்கள் உடனடியாக நகராட்சியை எதிர்பார்க்காமல், கையில் இருந்து செலவு செய்து புதிய குழாய் பொறுத்தியுள்ளார்கள்.

மேலும் இது சம்பந்தமாக கூறிய அல் அமீன் அமைப்பு உறுப்பினர் ஒருவர், தற்காலிமாக குடிநீர் வீணாவதை தடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.  இன்னும் ஒரு சில நாட்களில் நிரந்தரமாக தீர்வு காணும் வண்ணம், வாருகால் மூடியை சிமெண்ட் வைத்து மூடி, நல்ல தரமான இரும்பு குழாய் பதிக்க முயற்சி செய்துள்ளோம் என்றார்.

உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு கண்ட அல்அமீன் சகோதரர்களின் பணி நிச்சயமாக பாராட்ட பட வேண்டிய ஒன்று.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..