கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (28/07/2018) நடைபெற்றது.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியர்களிடையே கீழக்கரை காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி தலைமை உரை நிகழ்த்தினார். கீழக்கரை மகளீர் காவல் ஆய்வாளர் யமுனா “பெற்றோர் அல்லாத மற்ற ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படியும், ஸ்கூலுக்கு செல்லும் பஸ்ஸிலோ, மற்ற வாகனங்களிலோ, நடந்தோ செல்கையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டாகும் நபர்களைப் பற்றி 1098 என்ற இலவச எண்ணிற்கு போன் செய்து விபரம் தரவும் என்றும், அந்த எண் மனதில் பதியுமாறு மூன்று நான்கு முறை அனைவரையும் கூறச் சொல்லி உரை நிகழ்த்தினார்.

கீழக்கரை சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் திரு. முனீஸ்வரன், 12வது வார்டு முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சித்தீக் அலி, மற்றும் மக்கள் டீம் காதர் உடனிருந்தனர். நிகழ்ச்சி முடிவில் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  நல்லம்மாள் நன்றி தெரிவித்தார்.

தகவல்:- மக்கள் டீம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..