Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் சிறுபான்மை இன மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு..

இராமநாதபுரம் மாவட்டம் சிறுபான்மை இன மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.07.2018) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை  பயனாளிகளிடமிருந்து பெற்றார்.

​லோன் மேளா சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும்  தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) செயல்படுத்தி வருகிறது.  

​கல்விக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மாணவ, மாணவியர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு, இளநிலைஃமுதுநிலை தொழிற்கல்வி (BE.,B.TECH.,M.B.B.S,B.SC., AGRI) மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்விக்கடன் உள்ளிட்ட அனைத்து கடனுதவி திட்டங்களும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிஃ நகர கூட்டுறவு வங்கிஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படுகிறது.  

​கல்விக்கடன் திட்டம்-1ல் ரூ.3.00 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையில் ஆண்டிற்கு 3மூ வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம் -1ல் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் ரூ.1,20,000/-ம் கிராமப்புறம் ரூ.98,000/-ம் இருத்தல் அவசியம்.

​கல்விக்கடன் திட்டம்-2ல் ரூ.4.00 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையில் ஆண்டிற்கு மாணவருக்கு 8 சதவீதமும்ää மாணவியருக்கு 5 சதவீத விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம் -2ல் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம்ஃ கிராமப்புறம் ரூ.1,20,001/- முதல் ரூ.6,00,000/- வரை இருத்தல் அவசியம்.

​கல்வி பருவக்காலம் முடிந்த தேதியிலிருந்து (அ) அடுத்த 6-வது மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து  60 மாதங்கள் வரை வசூலிக்கப்படும்.

​மேலும் தனி நபர் கடன் திட்டம், வியாபாரம், தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கடன் அளிக்கப்படுகிறது.  மேலும் சில்லரை வியாபாரம், மரபு வழிச்சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில் நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகன கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறு கடன் வழங்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-2018ஆம் நிதியாண்டில் 430 பேருக்கு ரூ.2 கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரம் பரிந்துரை செய்துää அவற்றில் 301 நபர்களுக்கு ரூ.1 கோடியே 38 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.  2018-2019ஆம் நிதியாண்டில் ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  அதற்கான விண்ணப்பங்கள் இன்றைய தினம் பெறப்படுகிறது.  இதனை சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும்  அவர் பேசுகையில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மை  மாணவர்கள் கடன் தொகை பெற சாதிச் சான்றிதழ்/ பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை/ இருப்பிடச்சான்று நகல், பயனீட்டுச்சான்றிதழ் (BONAFIDE CERTIFICATE ) கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி   மற்றும் முன்னோடி வங்கி ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்;” என மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் பேசினார்.

​அதன்பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை  பயனாளிகளிடமிருந்து பெற்றார்.

​இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவதாஸ், இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் எஸ்.பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!