மாமேதை டாக்டர் APJ அப்துல் கலாம் மூன்றாவது நினைவு தின மலரஞ்சலி மற்றும் அமைதி பேரணி..- புகைப்பட தொகுப்பு

மாமேதை முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் APJஅப்துல் கலாம்  அவர்களின் மூன்றாவது நினைவு தினத்தினை நினைவு கூறும் வகையில் 26.07.2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து அமைதிப் பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் மாவட்டத்தின் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலைகல்லூரி, முஹம்மது சதக் ஹமீது கலை  கல்லூரி,  சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, முஹம்மது சதக் கல்வியியல் கல்லூரி  கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவமாணவியர்கள் கலந்து கொண்டு டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் புகைப்படப் பிரதியினை கையில் ஏந்தி சென்றனர்.

ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன்  தலைமையில் துணைத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் புரவலர் இராமநாதன் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஆ. வள்ளி விநாயகம்  ஆகியோர் முன்னிலையில்  இராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் பேரணியினை துவக்கி வைத்தார்.

பேரணியானது டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து ரோமன் சர்ச் சந்திப்பு, சாலைத்தெரு, அக்ராகாரம் சாலைஅரண்மனைச்சாலை, மணிக்கூண்டு, வண்டிக்காரர் தெரு  பஜார் காவல் நிலைய சாலை வழியாக வந்து மீண்டும் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.  

பேரணியில் கலந்து கொண்டவர்கள் டாக்டர் APJ அப்துல் கலாம் திரு ருவப் படத்தின் முன் அணிவகுத்து நின்றுரெட் கிராஸ் புரவலர் எம். தேவி உலகராஜ் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் T. பாலமாரன் ஆகியோர் தலைமையில் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளையும் குறிக்கோளையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  இரண்டு நிமிட அமைதிப் பிரார்த்தனை நடைபெற்றது.  அனைவரும் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்

பேரணிக்கான ஏற்பாடுகளை ரெட் கிராஸ் பொருளாளர் சி. குணசேகரன்,  ஆயுட் கால உறுப்பினர்கள் ஏ. மலைக்கண்ணன், எம். பழனிக்குமார், எல். கருப்பசாமி  மற்றும் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..