இலங்கை அரசு விடுவித்த மீனவர் இராமநாதபுரம் வருகை..

எல்லை தாண்டியதாக கைது செய்து இலங்கை சிறையில் இருநது விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் இன்று மாலை ராமநாதபுரம் வந்தனர்.

இராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஜூலை 5, 6 ல் தொழிலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர் . எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ரென்சின் 40, பாலு 40, கார்த்திக் ராஜ் 55, சுதன் 30, அலெக்ஸ் பாண்டியன் 24, லெவுகன் 25, முனீஸ்வரன், ஜான் போஸ், அந்தோணி இன்னாசி, செல்வம் 44, தினேஷ் 22, முத்திருளாண்டி 42, கோவிந்தராஜ் 38 உள்பட 16 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்து 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து 16 பேரும் இலங்கை அரசின் பாஸ்போர்ட் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதே போல் பதினாறு மீனவர்கள், ஜூலை 16ல் மிதவையில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகத்தால் கச்சத்தீவில் தனுஷ்கோடி மீனவர் 2 தஞ்சம் அடைந்தனர். பதினெட்டு பேரையும் மெரியனா முகாமில் இருந்து விமானம் மூலம் மதுரை அனுப்பி வைக்க இலங்கை அரசு முடிவு செய்தது.

இலங்கையில் இருந்து பதினெட்டு பேரும் விமானம் மூலம் இன்று (25.7.18) மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தனர். பிள்னர் அரசு பஸ் மூலம் நேற்று மாலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இவர்களை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர்.தங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர். இரு நாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..