ஒரே நாளில் சீராக்கப்பட்ட குப்பை மேடு, கீழக்கரை நகராட்சிக்கு ஒரு சபாஷ்..

கீழக்கரை வடக்குத் தெரு மருத்துவமனைகள் அதிகமாக இருக்கும் சாலையில் இருந்து வண்ணாந்தெரு வழியாக கடைத் தெருவுக்கு செல்லும் வழியில் குப்பைத் தொட்டி கவிழ்க்கப்பட்டு குப்பைகள் வெளியில் சிதறி சுகாதாரக் கேடு விளைவிக்கும் வண்ணம் இருந்தது. இ்ந்நிலையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் அத்தெரு வாட்ஸ்அப் தளத்தில் பகிரப்பட்டது.

அத்தகவலை அத்தளத்தின் மூத்த உறுப்பினர் நசுருதீன் வடக்குத் தெரு அரசியல் பிரமுகர் இம்பாலா சுல்தான் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். உடனே அவரும் நகராட்சி ஊழியரை தொடர்பு கொண்டு அதற்கான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் விண்ணப்பதை ஏற்று இன்று (23/07/2018) காலையே அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக இம்பாலா சுல்தான் கூறுகையில், இந்த இடத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது முதல் தடவை அல்ல, இது போல் இதற்கு முன்னரும் நடந்துள்ளது, காரணம் இங்கு குப்பை சோிப்பதற்காக வைக்கும் தள்ளு வண்டிகள் மற்றும் தொட்டிகளை சேதப்படுத்தப்படுகிறது. தற்சமயம் புதிதாக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியின் சக்கரமும் சேதப்படுத்தப்பட்டு கவிழ்க்கப்பட்டுள்ளது. நாம் பிரச்சினைகளுக்கு நகராடசியை நாடும் அதே சமயம் ஒவ்வொருவரும் அவரவர் பகுதியின் சுகாதாரத்தைப் பேணுவதில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம் ஆகும். மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் சேதமடைந்த குப்பைத் தொட்டியை சரி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதற்கான நிதிகள் முறைப்படி ஒப்புதல் கிடைத்தவுடன் மாற்றப்படும்” என வருத்தத்துடன் கூறினார்.

ஒவ்வொரு தனி மனிதனின் ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கத்திற்கு மிக அவசியம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு…

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

1 Comment

Comments are closed.