தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக திறன் மேளா..

 

தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் திறன் பயிற்சிபெற வேண்டியதன் அவசியம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட வேண்டுமென ஆணையிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது.

எனவேää இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 04.07.2018 அன்று நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்டமாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 26.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இத்திறன் மேளா நடைபெற உள்ளது. இத்திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு பதிவு செய்து பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..