பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை, சி.எஸ்.ஐ. மதுரை   இராமநாதபுரம் திருமண்டில சுற்றுச் சூழல் கரிசனைத்துறை மற்றும் ராமநாதபுரம் கிறிஸ்து ஆலயம் ஆகியோர் இணைந்து  பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வை நடத்தினர்.

புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பேரணியை திருமண்டில சட்ட ஆலோசகரும் பள்ளியின் தாளாளருமான மனோகரன் மார்ட்டின் தலைமையில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஆ. வள்ளி விநாயகம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலையமையாசிரியர் பால்மாறன் ஆகியோர் முன்னிலையில் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன் துவக்கி வைத்தார்.  செயலாளர் பால்சன் வரவேற்றார்.

மதுரை  இராமநாதபுரம் திருமண்டில சுற்றுச் சூழல் கரிசனைத்துறை இயக்குனர் அருள்திரு ஜே. ராஜன், கிறிஸ்து ஆலய போதகர் அருள்திரு கிறிஸ்டோபர் டேவிட் மற்றும் திருமண்டில பசுமைப் பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் மோசஸ் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் மரம் எவ்வாறு மனிதனுக்கு ஆக்ஸிஜனை அளித்து உதவுகிறது என்பதனைப் பற்றியும் விவரித்தனர்

புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிறிஸ்து ஆலயத்தை சென்றடைந்தது. சபை மக்களுக்கு 150 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.  பொருளாளர் முத்துராஜா நன்றி கூறினார்.

திருமண்டில மாமன்ற உறுப்பினர் ஆலிவர் ஃப்ரீமன்,  ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் மலைக்கண்ணன், மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  

புனித ரமலான் வாழ்த்துக்கள்..