Home செய்திகள் இராமநாதபுரத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்றுமதி இறக்குமதி கடும் பாதிப்பு! சங்க தலைவர் ராஜீவ் காந்தி தகவல்!

இராமநாதபுரத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்றுமதி இறக்குமதி கடும் பாதிப்பு! சங்க தலைவர் ராஜீவ் காந்தி தகவல்!

by ஆசிரியர்

இராமநாதபுரம்  மாவட்ட  லாரி உரிமையாளர்கள் சங்கம் அவசர கூட்டம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சங்க    அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயலாளர் மோகன்,    துணைத் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ

ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1500           சரக்கு.   ஏற்றுமதி லாரிகளும் சுமார் 1800   சரக்கு இறக்குமதி   டிப்பர் லாரிகளும் இயங்கி வருகின்றன.    இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் டீசல் உயர்வு மற்றும் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களையும் மற்றும் டோல்கேட் கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் சங்கங்களுடன் இணைந்து லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி வர்த்தகங்கள்    கட்டுமானப் பொருள்கள் தேங்கி உள்ளன .ஏற்றுமதி இறக்குமதி பொருள்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சுரேஷ் திருமுருகன் மோகன்ராஜ், மூர்த்தி, மணிகண்டன் உள்பட   மணல் லாரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர்கூட்டத்தில் கலந்துகொண்டனர். சங்க பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!