இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா..

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர்  கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் அருமையான பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வணக்கம் 20 கல்வி நிறுவனங்களை நிறுவி அதில் ஒன்றான கல்வியல் கல்லூரியை இந்த ராமநாதபுரத்தில் நிறுவி செம்மையான கல்வியை இப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த ஊர் ராமநாதபுரம் இக் கல்லூரி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது புன்னகையுடன் இருக்க வேண்டும் வகுப்பு அறை யிலும் வாழ்க்கையிலும் வெற்றியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். வகுப்பறையில் தோற்றுப் போகலாம் வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது, முதலாவதாக மாணவிகள் அதிகாலையில் எழ வேண்டும், படிக்கட்டாக வைத்துக்கொள்ள வேண்டும், நேரம் தவறாமை உண்மை கடைபிடிக்க வேண்டும், ஒவ்வொரு காலகட்டத்திலும் சிந்தனைகள் மாறுபட வேண்டும், ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு வேலை இல்லை என்று ஒதுங்காமல் ஆன்லைன் டீச்சிங் கற்றல் குறைவான குழந்தைகளை தேர்ந்தெடுத்து பாடங்களை நடத்தி சுயசம்பாத்யத்தில் வாழ்க்கையை நடத்தலாம் என்று உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் முகமது சதக் டிரஸ்ட் சேர்மன் முகமது யூசுப் செயலாளர் ஷர்மிளா இயக்குனர் ஹபிப் ஹமீது இப்ராஹிம் முதல்வர் சோமசுந்தரம் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் சைடெக் முதல்வர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..