ரத்த புற்று நோயை குணமாக்குவது இனி எளிது தான் – சென்னை அரசு மருத்துவமனையின் புது முயற்சி.

இரத்தப் புற்று நோயை குணமாக்கும் வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

உயிர்க்கொல்லி நோயான ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர் சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன்த,னியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் திறக்கப்பட்டதை அறிந்ததும் அங்கு வந்து சீனிவாசன் சேர்ந்துள்ளார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தி உள்ளனர்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயல்படும் இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம்  ரத்த புற்று நோயாளிகளுக்கு  தீர்வு தரும் மையமாக செயல்படும் என்கிறார் சீனிவாசனுக்கு மருத்துவம் அளித்த டாக்டர் மார்கரெட்..தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யக் கூடிய இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யலாம். தென்இந்தியாவில் முதல் முறையாக இங்கு தான் இந்த சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதாகவும், தொடர்ந்து மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஏழை நோயாளிகளிக்கு வாழ்வளிக்கும் அரசு மருத்துவமனையின் முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

1 Comment

Comments are closed.