இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி கடல் அட்டைகள். படகு பறிமுதல் இருவர் கைது..

இராமநாதாரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஓலைக்குடா, சங்குமால், மண்டபம், வேதாளை, சினியப் பா தர்கா, உச்சிப்புளி தோப்பு வலசை, தொண்டி உள்ளிட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் மர்மப் படகுகள் மூலம் அடிக்கடி கடத்தப்படுவது வழக்கம். தமிழக மெரைன் போலீசார் மற்றும் வனத்துறை கண்காணிப்பால் கடல் அட்டைகள் கடத்தல் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ கடல் அட்டைகள் . பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டபம் வடக்கு கடல் மார்க்கமாக மர்மப்படகில் கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் மெரைன் போலீசார் திடீர் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் மர்மப் படகுடன் நின்ற 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மலைப்பாண்டி 48, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை காசிம் 31 ஆகியோர் கடல் அட்டைகள் கடத்த இருந்தது தெரிந்தது. இவர்களிடமிருந்து நன்கு உலர வைத்து 29 மூடைகளில் இருந்த 1,200 கிலோ கடல் அட்டை, நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..