இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டது..

இராமநாதபுரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய அமைச்சர் மணிகண்டன்    இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை திறந்து வைத்தார்.    அமைச்சர் மணிகண்டன் அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது இப்பகுதியில் தேர்தல் வாக்குறுதியாக கூறியவற்றை தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் உச்சிப்புளி  அருகே இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் குறிப்பாக சுற்றுச்சுவர் உடனே உடனடியாக கட்டித்தருவேன்     என வாக்குறுதி குறிப்பிட்டிருந்தார், அதனை நிறைவேற்றும் வகையில் தனது சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார் அந்த நிதியின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை    திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை கண்டிப்பாக போராடியாவது பெற்றுத்தருவேன் விரைவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி வந்துவிடும் என்பது உறுதியானது மாணவர்கள் நேர்மையாகவும் பிற்காலத்தில் பணியில் சேரும்போது ஊழலற்ற நிர்வாகம், பணியாற்றும் முறையில் தற்போது தங்களது நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனது தொகுதி நிதியிலிருந்து செய்யப்படும் அனைத்து பணிகளிலும் ஒரு பைசா கூட கமிஷன் பெறாமல் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் டாக்டர் மணிகண்டன்  பேசினார்.  நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். தலைமை   ஆசிரியர் டேவிட் மோசஸ் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்திரன், இருமேனி  ஊராட்சி கழக  செயலாளர் நஜுமுதீன்.  பெருங்குளம்   ஊராட்சி கழகசெயலாளர் ஜானகிராமன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..