Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் மூலம் ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்“ (Aspirational District ) திட்டப்பணிகளின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரோக்கியமான சூழ்நிலையினை ஏற்படுத்திட ஏதுவாக அவரவர் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை என்பதை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தேவிப்பட்டிணத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்அ இன்று (20.07.2018) ஆய்வு செய்தார்.

‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்“ திட்டப்பணிகளின் கீழ் கல்வி, பொதுசுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி,  உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுசுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட வளர்ச்சி பணிகள் ஆகியவற்றின் சார்பாக கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்தம் ஆரோக்கியத்தை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இணை உணவு (சத்துமாவு) வழங்கப்பட்டு வருகிறது.  அதேபோல பச்சிளம் குழந்தைகளுக்கு  உரிய கால இடைவெளியில் இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டு, விட்டமின்- யு திரவம், இரும்புச் சத்து திரவம் போன்ற ஊட்டச்சத்து திரவங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.  இதுதவிர 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கண்காணித்து பாதுகாத்திடும் விதமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்துள்ளபடி குழந்தைகளின் வயதிற்கேற்ற வளர்ச்சிநிலை என்பதை அடிப்படையாக கொண்டு குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம்ää எடை உள்ளதா என்பதை உறுதி செய்திடும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் மருத்துவப்பணிகளின் இணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.2 இலட்சம் மதிப்பிலான 55 எண்ணிக்கையில் உயரம் மற்றும் மின்னணு திரை கொண்ட எடை அளவீட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிதாக இக்கருவியினை வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த அளவீட்டு கருவிகள் மூலமாக அந்தந்த ஊரகப்பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளவீடு செய்யப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீடுகள் சரிநிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு அளவீடுகள் சரியான நிலையில் இல்லாத குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திட தேவையான ஊட்டச்சத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

அதன்படி இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாக சென்று குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி நிலையினை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம்  குழந்தைகளை கவரும் வகையில் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு  படங்கள் திரையிடுவதைப் பார்வையிட்டார்.

அதன்பிறகு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணியாளர்கள் மற்றும் ஊரக பொது சுகாதார செவிலியர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று கள ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் குறித்த விபரங்களை நூறு சதவீதம் விடுபடாமல் கணக்கெடுப்பு செய்து கண்காணித்திட வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலமாக தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின் போது மத்திய அரசு திறன் வளர்ச்சி துறை உதவி செயலாளர்  டாக்டர்.வைத்தியநாதன், இராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!