வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்திறன் பயிற்சி பெற கௌசல் பாஞ்சி (Kaushal Panjee ) செயலியில் பதிவு செய்திடலாம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.07.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்  தலைமையில் ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்” (Aspirational District) திட்டப் பணிகளின் கீழ் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும்  ‘கௌசல் பாஞ்சி” என்ற செயலி குறித்து மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்துள்ள மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.  அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி, பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, விவசாயிகள் நலன் வேளாண்மை மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

​அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளித்து  வேலைவாய்ப்பினை அதிகரித்தல்ää சுயதொழில் துவங்க ஊக்குவித்தல் என்பதை அடிப்படையாக கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக மத்திய தொழில்திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பாக (Central Ministry of Skill Development Entrepreneurship) சார்பாக கௌசல் பாஞ்சி (Kaushal Panjee ) என்ற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  

​படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த செயலியின் வாயிலாக பதிவு செய்வதன் மூலம் மத்திய தொழில்திறன் மேம்பாடு அமைச்சகத்தில் பதிவு பெற்ற பயிற்சி நிறுவனங்களைக் கொண்டு இளைஞர்களின் விருப்பத்திற்கேற்ற துறைகளில் தொழில்திறன் பயிற்சி வழங்கிட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  குறிப்பாக உணவுப்பொருள் பதப்படுத்துதல், வாகன ஓட்டுநர் பயிற்சி, வாகன பழுதுபார்த்தல் பயிற்சி, மின்சாரம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி, வெல்டிங், பிளம்பிங் போன்ற பல்வேறு வகையான தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.  

​எனவே இத்தகைய பயிற்சியில் சேர விரும்பும் 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களது கைபேசியில் Playstore மூலம் “கௌசல் பாஞ்சி” செயலியினை தரவிறக்கம் செய்து தங்களது விபரங்களை பதிவு செய்திட வேண்டும். மேலும் இந்த செயலி குறித்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடத்தில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசினார்.

​இக்கூட்டத்தில் மத்திய அரசு திறன் வளர்ச்சி துறையின் உதவி செயலாளர்  டாக்டர்.வைத்தியநாதன், மாவட்ட திட்ட இயக்குநர் கோ.குருநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.குமரகுருபரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தரமேஷ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.மாரியம்மாள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்  சரவணபாண்டியன், உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..