ரெட் ரிப்பன் கிளப் சார்பாக எய்ட்ஸ் பற்றிய விளக்க உரை..

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் தேவநேசம் இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் RED RIBBON CLUN சார்பாக மாணவர்களுக்கு எய்ட்ஸ் பற்றி விளக்கப்பட்டு கலந்துரையால் நடைபெற்றது.  இவ்விழாவில் கல்லூரி முதல்வர்  ஜீவானந்தம் தலைமையுரை ஆற்றினார்.  கல்லூரி துணை முதல்வர் கிருபாகரன் ஜோசப் முன்னிலையுரை வழங்கினார்.  அதைத் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர்களான இராம் பிரசாத், ரமேஷ் கருப்பசாமி,காளிராஜன், கார்த்திக், கோவில்பட்டி RUSS FOUNDATIONS ஆலோசகர்கள் சங்கீதா,  குருவம்மாள், செல்வி ஆகியோர்  எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ச.சரவணன் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

 

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..