இராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் …

இராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து முருகன் பேசினார்.

இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வை காலி பணியிடங்களின் அடிப்படையில் வெளிப்படையாக நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னாள் மாவட்ட செயலாளர் ராபர்ட் ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.