இராமநாதபுரத்தில் மக்கள் நல்வாழ்வு நண்பர்கள் இயக்கத்தினர் மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்!

இராமநாதபுரத்தில் மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் அமைப்பின் சார்பில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றி     பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி அதன் ஒருங்கிணைப்பாளர் கே. ஜெ.பிரவின்  தலைமையில் நடைபெற்றது  .


வறண்ட மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தின் பசுமையை காப்பாற்றும் விதமாக வீடுதோறும் மரங்கள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் இந்த அமைப்பினர்    ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றும் விதமாக மரங்களில் ஆணிகள் அடித்தலை தவிர்க்கவும் ஏற்கனவே அடித்துள்ள ஆணிகளை அகற்றவும் பணிகளை மேற்க்கொண்டுள்ளனர்.


இன்று முதல்கட்டமாக மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் சார்பாக பயோனியர் மருத்துவமனை சாலையில் உள்ள மரங்களில் ஆணிகளை அகற்றியும் அங்குள்ளவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

மரங்களை நடுவோம்,  நட்ட மரங்களை பேணிகாப்போம்.  என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும்  இவர்களை.    சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும். வெகுவாக பாராட்டினர்.