புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP)கீழ் கடனுதவி..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.07.2018) மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில் முனைவோருக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஐன், புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP)கீழ் 130 நபர்களுக்கு சுய தொழில் துவங்குவதற்காக ரூ.98.61 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.736.38 இலட்சம் வங்கிக் கடன் பெறுவதற்கு பல்வேறு வங்கிகளுக்கான பரிந்துரை ஆணைகளை  வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கூட்டத்தில் தொழில்முனைவோரின் கல்வித் தகுதி மற்றும் தொழில்களின் சாத்தியக்கூறுகள், சந்தை வாய்ப்பு மற்றும் மேலாண்மைக் குறித்து நேர்காணலில் பரிசீலனை செய்யப்பட்டது.  இத்தேர்வுக் கூட்டத்தில் மாவட்டதொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டத்தின் (NEEDS) கீழ் 4 நபர்களுக்கு நான்கு சக்கர வாகன சேவை மையம்,  சூரிய மின்சாரம் தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு ரூ.47.72 இலட்சம் தமிழக அரசு மானியத்துடன் கூடிய ரூ.587.43 இலட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 106 நபர்களுக்கு பனை ஓலையிலான பாய் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, பனை வெல்லம் தயாரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதுபார்ப்பு மையம், ஆயத்த ஆடை தயாரிப்பு, உணவு மசாலா பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானப் பொருட்கள் வாடாகை போன்ற தொழில்களுக்கு ரூ.40.74 இலட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.119.95 இலட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் கதர் மற்றும் கிராமதொழில்கள் ஆணையம் சார்பில் 15 நபருக்கு ஊதுபத்தி தயாரிப்பு, ஆயத்த ஆடை தயாரிப்பு, பனைஒலைபாய் தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு ரூ.3.15 இலட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.9.00 இலட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கதர் மற்றும் கிராமதொழில்கள் வாரியம் சார்பில்  5 நபருக்கு கட்டுமானப் பொருட்கள் வாடாகை, உணவகம், ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் பேக்கரி பொருள் போன்ற தொழில்களுக்கு ரூ.7.00 இலட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.20.00 இலட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் தற்காலிக ஒப்பளிப்பு பெற்றவுடன் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உரிய சான்றிதழ் பெற்றபின் வங்கிக் கடன் பட்டுவாடா செய்யப்பட்டு பின்னர் அரசுமானியம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

​இந்நேர்காணல் கூட்டத்தில் மாவட்;ட தொழில் மைய பொதுமேலாளர்  ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு, கதர் மற்றும் கிராமதொழில்கள் வாரிய உதவி இயக்குநர் பாரதி, கதர் கிராம தொழில்கள் ஆணைய அலுவலர் குமார்,  கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஆர்.சியாமளநாதன்,  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலர் மனோகரன், தாய்கோ கிளை மேலாளர் கற்பகலிங்கம், பாண்டியன் கிராம வங்கி மேலாளர்  குசேலன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.