இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் கிரிஷ் கல்யாண் அபியான் (விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்) திட்ட நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  இன்று (17.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் கிரிஷி கல்யாண் அபியான் திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக விவாசாயிகளுக்கு குட்டை இரக தென்னங்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:

​மத்திய,  மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வேளாண்மை நல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.  அந்தவகையில் இந்திய அரசு அறிவித்துள்ளபடிää 2022ல், ‘முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும்” என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் (Aspirational District) மாவட்டங்களைக் கண்டறிந்து,  அவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

​அவற்றில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளன.  மத்திய,  மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வேளாண்மை நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களில் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ்  வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நூறு சதவீதம் முழுமையாக நிறைவேற்றிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

​​இந்த 25 கிராமங்களிலும் இவற்றில் நுண்ணுயிர் பாசனத் திட்டம், எல்.இ.டி.பல்புகள் பயன்பாடு கழிவறை உபயோகம், எரிவாயு இணைப்பு கால்நடை பராமரிப்பு, காப்பீட்டுத் திட்டங்கள், பல்வேறு வகை பழ மரக்கன்றுகள் மற்றும் தொழுஉரக் குழியிடுதல் ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பொதுமக்களிடம் அதற்குரிய விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிராமத்தில் 120 விவசாயிகளுக்கு தரணி இரக நிலக்கடலை மினிக்கிட்டுகளையும்ää 100 விவசாயிகளுக்கு பழமரகன்றுகளையும், 40  விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு கிராமத்தில் மொத்தம் 260 விவசாய குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

​அதனடிப்படையில் இன்றைய தினம் கிரிஷி கல்யாண் அபியான் (விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்) திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக குட்டை இரக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.  இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு ஐந்து எண்கள் குட்டை இரக தென்னங்கன்றுகள் தென்னை வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்படுகிறது.  

​அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு குட்டை இரக தென்னங்கன்றுகளையும், தரணி ரக நிலக்கடலை மினிக்கிட்டுகளையும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் வழங்கினார்.  

​இந்நிகழ்ச்சியில் தென்னை வளர்ச்சி இயக்குநர் திரு. ராஜீவ் ப10சன் பிரசாத், தொழில் நுட்ப அலுவலர் சசிகுமார், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.கவிதா, கடலோர உவர் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந.சாத்தையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.இராஜா உட்பட வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..