மண்ணடியில் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தோடு, இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களின் புதியதோர் துவக்கம் – ‘MANNADY FOREX’ நாணய மாற்று நிறுவனம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காரத் தெருவை சேர்ந்த சுல்தான் நபீல் முகைதீன் மற்றும் தொண்டியை சேர்ந்த அமீர் அப்பாஸ், ஆகிய இரண்டு நண்பர்களும் இணைந்து சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் ‘MANNADY FOREX’ PRIVATE LIMITED என்கிற பெயரில் வெளிநாட்டு பண மாற்று நிறுவனத்தை, இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தோடு நேற்று 13.07.2018 வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர்  துவங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது குறித்து மண்ணடி பாரக்ஸ் (MANNADY FOREX) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுல்தான் நபீல் முகைதீன் கூறுகையில் ”இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பொருளாதாரம் தேடி வெளிநாடுகளில் உலகமெங்கும் வாழ்கின்றனர். அவர்கள் மூலமாக நம் தேசத்திற்கு அந்நிய செலாவணி வெகுவாக கிடைத்து வருகின்றது. இருப்பினும் பலருக்கு தங்கள் சம்பாதிக்கும் அந்நிய செலாவணியை முறையாக அனுப்பும் வழிமுறைகள் தெரிவதில்லை. எந்த ஒரு நாட்டினுடைய பணத்தையும் நம் நாட்டின் பணத்திற்கு ஈடான மதிப்பாக மாற்றிக் கொள்வதைத்தான் பண பரிமாற்றம் அல்லது நாணய பரிமாற்றம் என்கிறோம்.

குறிப்பாக வெளிநாட்டு பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்வதுதான் பண பரிமாற்றம். வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருப்பவர்கள் இந்தியாவில் தங்கள் உறவினர்களுக்கு பணத்தை அனுப்ப இந்த வசதியைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படியான பண பரிமாற்றத்திற்கு நவீன வசதிகளும் வந்துவிட்டன. வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணத்தை உள்நாட்டிலேயே எளிதாக மாற்றிக்கொள்ள இந்த சட்டபூர்வமான வழிகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த சட்டபூர்வமான வழிகளில் அந்நிய செலாவணியாக அனுப்பும்போது அதற்காக பிடித்தம் எதுவும் செய்யப்படுவதும் இல்லை. இதன் மூலம் விரைவாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த வெளிநாட்டு பணபரிமாற்ற நடவடிக்கைகள் மத்திய அரசின் கண்காணிப்பில் ரிசர்வ் வங்கி இவற்றைக் கட்டுப்படுத்துகிறது. பண பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெற்றுள்ள முகவர்கள், நிறுவனங்கள், வங்கிகள் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.

இறைவனுடைய அருளால் நாங்கள் இந்த நாணய பரிமாற்றத்திற்கான முகமை அங்கீகார அனுமதியினை பெற்று முறைப்படி எங்கள் நிறுவனத்தை துவங்கி உள்ளோம். ‘நாணயமே’ எங்கள் கொள்கையும் இலட்சியமும்… அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

மண்ணடி பாரக்ஸ் (MANNADY FOREX) நிறுவனத்தாருடைய தொழில் சிறக்க கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

sdr

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.