இராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ் வரும் 14ம் தேதி தொழிலுக்கு செல்ல முடிவு..

தமிழக கடலில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15- ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. இந்தாண்டு தடை காலம் நீக்கத்திற்கு பிறகு சில நாட்கள் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்த நிலையில் 3 விசைப்படகுகள் 16 மீனவர்களை இலங்கை சிறை பிடித்தது. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஸ்டிரைக் செய்து வருகின்றனர்.

தடைக்காலம் முடிந்த பிறகு 5 முறை மட்டும் கடலுக்குச் சென்றதால் மீனவ தொழிலாளர் வாழ்வாதாரம் பாதித்தது. இதை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச்செல்வதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தீர்மானித்தனர். அறிவிப்பையடுத்து வரும் 14ல் (சனி) தொழிலுக்குச் செல்கின்றனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..