ஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி ஜூலை மாதத்திற்கான பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 14, சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் வட்டம் காரேந்தல், இராமேஸ்வரம் வட்டம்  அக்காள்மடம் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானை வட்டம்  மச்சூர், பரமக்குடி வட்டம்  உரப்புளி, முதுகுளத்தூர் வட்டம் கொல்லங்குளம், கடலாடி வட்டம்  பொதிகுளம், கமுதி வட்டம் அபிராமம் சிஆர்எஸ் 2, கீழக்கரை வட்டம் களிமண்குண்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்கள் குறைகள், மின்னணு ரேஷன் கார்டுகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 14 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இம்முகாமில் பொதுமக்கள் மின்னணு ரேஷன் கார்டுகளில் பிழை திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. நடராஜன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.