தனியார் மருத்துவ மனையில் இளம்பெண் தர்ணா…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையில் 10-07-18 மாலை 6 -மணி அளவில் கொடைரோடு ரயில்வே காலனியில் குடியிருக்கும் மேற்கு வங்கத்தைச் (கொல்கத்தா – வை) சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தென்னக ரயில்வேயில் சிக்னல் பிரிவில் கொடைரோடு ரயில் நிலையத்தில் பணிபுரிகிறார்.

இவரின் தாய் சாவித்திரி (52) என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரையிலுள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 – மணியளவில் திடீர் உடல் நிலை சரியில்லாமல் போனது அருகிலுள்ள கொடைரோடு ராசி கிளினிக்கில் சேர்க்கபட்டார். அப்பொழுது அங்குள்ள மருத்துவர்  அவர்கள் மிகவும் அஜாக்கிரதையாக நோயாளிகளின் சிரமங்களை உணராமல் போனில் பேசி கொண்டே நேரம் கடந்த காரணத்தால் முதலுதவி செய்யாததால் சாவித்திரி மருத்துவமனையிலே உயிரிழந்துள்ளார்.

மேலும் மருத்துவர் உடலை உடனடியாக வெளியே கொண்டு செல்ல வேண்டும் என கூறி வெளியேற்றி விட்டார் , ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களில் ஏற்றமாட்டார்கள் ஆம்புலன்ஸ் வரும் வரை சிறிது நேரம் அனுமதி கேட்டும் அனுமதிக்காமல் வெளியேற்றியதால் வட மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்ணின் மருமகள் புவனேஷ்வரி மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது “கொடைரோடு பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய ஒரே தனியார் மருத்துவமனை ராசி கிளினிக் மட்டுமே உள்ளது,  இதனால் இங்குள்ள மருத்துவர் எப்பொழுதும் செல்போனில் பேசிக் கொண்டே அஜாக்கிரதையாக செயல்படுகிறார் என்றும் 24-மணிநேர மருத்துவமனை என்று கூறி பல நேரங்களில் எந்த மருத்துவரும் பணியில் இருப்பதில்லை என்றும் , பல்வேறு விபத்துகளில் முதலுதவிக்காக வருபவர்களைக் கூட அனுமதிப்பதில்லை” என்றனர்.